திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 மே 2021 (08:27 IST)

கோமியத்தை அடுத்து ஹவன் புகை... கொரோனாவுக்கு சங்கு ஊத புது முயற்சி!

கோமியத்தை அடுத்து ஹவன் புகை எனும் ஒன்றை உருவாக்கி கொரோனாவை ஒழிக்க மீரட் பாஜக பிரமுகர் புது முயற்சி எடுத்துள்ளார். 

 
சாணமும், கோமியமும் உடலில் பூசிக்கொண்டு யோகாசனம் செய்தால் கொரொனா தொற்றுப் போய்விடும் என வடமாநிலத்தவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், இப்படி மாட்டு சாணமும் கோமியமும் அருந்துவதால் புதிய நோய்கள் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சிலலும், இதனால் ஒன்றும் பயனில்லை என சுகாதார நிலையமும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், உத்திரப்பிரதேசம் மீரட்டில் மாட்டு சாணம், பசுவின் நெய், மா மரத்தின் தண்டுகளை கற்பூரம் கொண்டு எரித்து, சங்கு ஊத்யபடியே புகையை பரப்பினார் மீரட் பாஜக தலைவர் கோபால் சர்மா. இந்த புகைக்கு ஹவன் புகை என பெயரிட்டுள்ளனர். இப்படி செய்வதால் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என கூறிப்பிட்டுள்ளார்.