செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 மே 2021 (12:58 IST)

கேரளம் பட்டொளி வீசி பறக்கட்டும்: பினரயி விஜயனுக்கு கமல் வாழ்த்து

சமீபத்தில் நடைபெற்ற கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் பினரயி விஜயன் அவர்களின் இடதுசாரி முன்னணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதனை அடுத்து இன்று அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்
 
இதனால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பினரயி விஜயன் அவர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது வாழ்வில் கூறியிருப்பதாவது:
 
என் நேசத்திற்குரிய சகாவு பினரயி விஜயன் இன்று கேரளத்தின் முதல்வராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். நான் உத்தேசிக்கிற அரசியலுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறவர். நேர்மையான திறமையான நிர்வாகத்தினால் எந்த இடரையும் முறியடிக்கலாம் என நிரூபித்துக்காட்டிய நண்பரை இன்று போனில் வாழ்த்தினேன். அடுத்த ஐந்தாண்டுகளில் கேரளம் பட்டொளி வீசி பறக்கட்டும். இன்னும் இன்னும் சிறக்கட்டும்’ என்று கமல் கூறியுள்ளார்.