செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (16:58 IST)

நாட்டுக்காக தியாகம் செய்வதை ஆர்.எஸ்.எஸ் கற்று கொடுக்கிறது: மோகன் பகவத்

Mohan Bhagwat
நாட்டுக்காக தியாகம் செய்வதை நாட்டு மக்களுக்கு ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார் 
 
அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைவதற்காக சமூகத்தை ஒன்றிணைப்பது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சுயநலமின்றி நாட்டுக்காக தியாகம் செய்வதை ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது என்றும் இந்தியா வல்லரசாக மாறும் போது ஒவ்வொரு குடிமகனும் சக்தி வாய்ந்தவர்களாக மாறுவார்கள் என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார் 
 
ஆர்.எஸ்.எஸ் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது