திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (09:32 IST)

மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? சரத்குமார் பதில்

நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு, 'மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என ஜோதிடம் கூற முடியாது. ஆனால், ஆகமாட்டார் என்பது என் ஆழமான கருத்து என்று பதிலளித்தார்.

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சரத்குமார், 'சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என ஆகமவிதி இருக்கும்போது, பாலின சமத்துவத்தை சுட்டிக்காட்டி பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஏற்புடையதல்ல என்று கூறினார்.

மேலும் கவர்னரின் செயல்பாடுகள், ஆய்வுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், 'தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும்போது, கவர்னர் ஆய்வுக்கு செல்லக்கூடாது என்று கருத்து தெரிவித்தார்.