செல்பி மழையில் சிக்கிய திணறிய சரத்குமார் – பரபரப்பு வீடியோ
நடிகர் சரத்குமார் ரசிகர்களின் செல்பி மழையில் சிக்கி திணறிய சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது.
கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் அமைந்திருக்கும் அழகம்மை மஹாலில், விசில் ரோட்டரிக்கு விசில் போடு என்ற நிகழ்ச்சியும், ரோட்டரி கிளப் ஆப் கரூர் ஏஞ்சல்ஸ் சார்பில் பப்ளிக் இமேஜ் செமினார் என்கின்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், நல்ல தத்துவங்களை கூறியும், வாழ்க்கையில் முன்னேறியவர்களின் கதைகளை கூறி முடித்துக் கொண்டு ரோட்டரி நிர்வாகிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
நேரம் பற்றாக்குறையினால் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொண்டு செல்ல திட்டமிட்டார். அப்போது தொழிலதிபர்கள், அரங்கினுள் தங்களுடைய செல்போனில் செல்பி எடுத்து, நேரத்தினை தாமதப்படுத்தினர். மேலும், ரசிகர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, அவர்களுடன் சிரித படி செல்போன் எடுத்த நிலையில், பின்னர் செய்தியாளர்கள் மைக்கை எடுத்து நீட்டி, செய்தியாளர்களின் சந்திப்பினையும் முடித்துக் கொண்டு, வாகனத்தில் ஏற முற்பட்டார்.
ஆனால் அங்கிருந்த அதாவது அரங்கிற்கு வெளியே இருந்த ரசிகர்கள், தங்களது செல்போனை ஆன் செய்து, செல்பி எடுத்தனர். மேலும், மேலும், செல்பி எடுத்துக் கொண்டு, ஒரு வழியாக கிளம்ப ஆரம்பித்த நடிகர் சரத்குமாரை, காரிக்குள்ளும், ஏறிய நிலையிலும், ரசிகர்கள் காரிற்கு வெளியே இருந்து செல்பி எடுத்ததினால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினரும் அங்கு பாதுகாப்பு பணியில் இல்லாத நிலையில், செல்பி பிரச்சினையை தீர்த்து பின்னர் புறப்பட்டார். செல்பி ரசிகர்களின் முற்றுகையிட்டது போல், நடிகர் சரத்குமார் நிகழ்ச்சி அமைந்திருந்த நிலையில், நடிகர் சரத்குமார் தனது முகபாவனையை இன்முகத்தோடு, ரசிகர்களிடம் காண்பித்ததோடு அங்கிருந்து புறப்பட்டார்.