1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi silent towards problems in new currency printing issues

அரைகுறையாய் அச்சிடப்பட்டு வெளியாகும் ரூபாய் நோட்டுகள்: வாய் திறக்க மறுக்கும் மோடி!!

அரைகுறையாய்
குஜராத் மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள் வெளிவந்ததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


 
 
குஜராத் மாநிலத்தில் பரோடா வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த அல்டாப் சாகி என்பவருக்கு அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன.
 
ரூ.10,000 பணம் எடுத்த அவருக்கு கிட்டதட்ட 6 நோட்டுகள் ஒழுங்காக அச்சாகாமல் வந்துள்ளது. ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் மட்டுமே அச்சாகியிருந்தது, மற்றொரு பக்கம் அச்சிடப்படவில்லை. 
 
இந்நிலையில், பணமதிப்பிழப்பை அறிவித்த போது காரசாரமாக பேசிய மோடி, அரைகுறையாக அச்சானவை, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்குப் பதிலாக சில்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சானவை, வரிசை எண் அச்சாகாதவை என தொடர்ந்து குறைபாடுள்ள ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்-ல் வெளிவருவது குறித்து வாய் திறக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துயுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஃபேஸ்புக் நேரலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி: ரசித்து பார்த்த 40 பேர்!