வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:37 IST)

2500 ஏக்கரில் சபரிமலையில் விமான நிலையம்.. பிரதமர் மோடி அறிவிப்பு..!

2500 ஏக்கரில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
 
சபரிமலையில் விமான நிலையம் அமைவது ஆன்மீக சுற்றுலாவுக்கு மிகப்பெரிய செய்தி என்றும் அவர் அந்த டுவிட்டில் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 
 
இந்த நிலையில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் கேரள மாநிலம் சபரிமலை அருகே 2500 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran