வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (13:59 IST)

கவுஹாத்தியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி !

PM Modi
நாட்டில் முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ள நிலையில், இன்று கவுஹாத்தியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மா நிலத்தில் உள்ள கவுஹாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பதுடன் நல்பாரி, கோக்ரஜார்,  நாகோன் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரியையும் பிரதமர் மோடி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று பிரதமர் நரேந்திர மோடி, அசாம் மாநிலத்திற்கு வருகை தந்து, கவுஹாத்தியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையை திறந்துவைத்தார்.

இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு  பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.1120 கோடியில் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று கவுஹாத்தியில் சுமார் 11000 க்கும் அதிகமான நடனக்கலைஞர்கள் பங்கேற்கும் மெகா பிஹூ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.