வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (16:21 IST)

‘மோடி’ பெயர் குறித்த பேச்சு சர்ச்சையான இடத்திற்கு வருகை தரும் ராகுல் காந்தி..!

rahul gandhi
கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதே இடத்திற்கு ராகுல் காந்தி மீண்டும் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி ஏப்ரல் 16ஆம் தேதி கோலார் இந்த பகுதியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதே கோலார் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் தான் மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது 
 
இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு அவரோடு அவருடைய எம்பி பதவியும் தகுதி இழப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் மோடி குறித்து பேசிய அதே பகுதிக்கு மீண்டும் ராகுல் காந்தி வருகை தரவுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran