வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (13:03 IST)

மோடியின் மேன் vs வைல்டு – பேர் கிரில்ஸுடன் அட்வன்சர் பயணம் !

பிரதமர் மோடியின் சாகசக்காரரான பேர் கிரில்ஸுடன் இணைந்து சாகசப் பயணம் மேற்கொண்ட மேன் vs வைல்டு நிகழ்ச்சி பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

பேர் கிரில்ஸ் உலகம் முழுவதும் பிரபலமான காடுகளுக்குள் சாகசப்பயணம் மேற்கொள்ளும் சாகசக் காரர். இவரின் சாகசப்யணங்களாக மேன் vs வைல்டு நிகழ்ச்சிகள் உலக அளவில் பிரசித்தம். இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் மோடியுடன் செய்த சாகசப்பயண நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பேர் கிர்ல்ஸ் இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவோடு இணைந்து இதுபோல சாகசப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி மேற்கொண்ட இந்த நிகழ்ச்சி இந்தியாவில் வன விலங்குகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.