1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (13:03 IST)

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அமைச்சர் அனுராக் தாகூர் விமர்சனம்..!

ஒளரங்கசீப் பள்ளியில் ராகுல் காந்தி மற்றும் ஒவைசி பயிற்சி பெற்றவர்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்து நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
முன் எப்போதும் இல்லாத வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி மற்றும் ஒவைசி ஆகிய இருவரும் ஒளரங்கசீப் சிந்தனை பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராகுல் காந்தி ஒவைசியின் பி அணியா அல்லது ஒவைசி ராகுல் காந்தியின் பி அணியா என்ற கேள்வி எழுப்பிய அனுராக் தாகூர் மத அரசியலை பரப்புபவர்கள் தான் ராகுல் காந்தி என்று இதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளையும் வெளிப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் 
 
அமேதி தொகுதியில் ஒரு பெண்ணால் தோற்கடிக்கப்பட்டவர் தான் ராகுல் காந்தி என்றும் ஹைதராபாதிலும் ஒவைசி ஒரு பெண்ணால் தோற்கடிக்கப்படுவார் என்றும் கூறினார். ஹைதராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மாதவி லதா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva