ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (19:24 IST)

மோடியால் பிரசித்தி பெற்ற குகைக்குச் செல்ல போட்டிபோடும் யாத்திரீகர்கள்!

சமீபத்தில் மோடி கேதார்நாத்தில் உள்ள ஒரு குகையில் தியானம் செய்தார். அதன் மூலம் அந்த குகை மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்நிலையில் ஆன்மீகம் பயணம் மேற்கொள்ளும் யாத்திரீகர்கள் இந்தக் குகைக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த பின், பிரதமர் மோடி,ராணுவ ஹெலிகாப்டர் மூலம்  2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார் நாத்  கோவிலுக்கு சென்றார். பாரம்பரிய உடையுடன் கோவிவிக்குள் நுழைந்த அவர் அங்கு வழிபாடு செய்தார். இது இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. 
 
மேலும் காவி உடையணிந்து   ஒரு குகைக்குள்  மோடி, அங்கு நீண்ட நேரம் தியானம் செய்தார். இந்த குகையில்தான் மாகாபாரத காலத்தில் பாண்டவர்கள் தியானம் செய்ததாகவும் தகவல்கள் வெளியானது.அதனால் பிரதமர் மோடி சென்ற குகை என்ற காரணத்தினால் சீக்கிரமே  அது மக்களிடமும் ஆன்மீக யாத்திரிகர்களிடமும் பிரபலமானது.
 
இந்நிலையில் தற்போது, பிரதமர் மோடி தியானம் செய்த குகைக்குச் செல்ல யாத்திரீகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூலை மாதத்துக்கான முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட்,செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. அதற்குத்தான் யாத்திரீகர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்துவருகின்றனர்.