செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (14:16 IST)

வாஜ்பாய் முகம் பதித்த 100 ரூபாய் நாணயம் –வெளியிட்டார் மோடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக அவரது உருவம் பதித்த 100 ரூபாய் நாணயத்தை இந்திய பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று பிறந்தார். அரசியல் , ஊடகம், கவிதை எனப் பல தளங்களில் இயங்கிய வாஜ்பாய் ஜனசங்கத்தை உருவாக்கினார். பல முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள வாஜ்பாய் மும்ம்னுறை இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். இவரது ஆட்சியின் போதுதான் பொக்ரானில் அனுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

வயது மூப்புக் காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று தனது 93 வது வயதில் உடல் நலக்க்குறைவால் உயிரிழந்தார். அவருடைய 94 வது பிறந்த தினம் நாளைக் கொண்டாடப்பட இருக்கையில் அவரை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு அவரது உருவம் பொதித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்தது.

டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமார் மோடி நாணயத்தை வெளியிட்டார். நாணயத்தின் பின் பக்கத்தில் வாஜ்பாயின் உருவமும் அவது வாழ்நாள் பற்றியக் குறிப்பும், அவரது பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டதாகும்.