வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (20:08 IST)

தமிழர் குறித்து ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி!

தமிழர் குறித்து ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி!
தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் தமிழகத்தில் பாஜக இடம்பிடிக்க முடியாது என்றும் சமீபத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆவேசமாக பாராளுமன்றத்தில் பேசினார்
 
இதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய ராகுல் காந்தி நினைக்கிறார் என்றும் எவ்வளவு முயன்றாலும் நாட்டின் ஒற்றுமையை குலைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் மண்ணும் இமயமலை எங்கள் மலையே என்ற பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி மக்களவையில் பிரதமர் மோடி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது