மோக்கா புயலின் வேகம் குறைந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
வங்க கடலில் உருவான மோக்கா புயலின் வேகம் குறைந்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் நேற்று காலை உருவான மோக்கா புயல் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இந்த புயல் மியான்மர் மற்றும் வங்கதேசம் படியே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மோக்கா புயலின் வேகம் மணிக்கு 11 கிலோமீட்டர் என குறைந்துள்ளதாகவும் இதனை அடுத்து சற்றுமுன் வெளியான தகவலின் படி மணிக்கு 7 கிலோமீட்டர் ஆக குறைந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோக்கா புயலின் வேகம் குறைந்ததால் நாளை மறுநாள் தான் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மார் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளும் புயலை எதிர்கொள்ள மீட்பு நடவடிக்கையை எடுக்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva