1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (15:31 IST)

பல முறை தலையில் அடி… 26 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர்!

பல முறை தலையில் அடி… 26 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஆஸி வீரர்!
ஆஸி அணியின் வீரரான வில் புக்கோவ்ஸ்கி ஆஸி அணிக்காக ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஆடிய அவர் 72 ரன்கள் சேர்த்தார். ஆஸி அணியின் வருங்கால தொடக்க ஆட்டக்காரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் புக்கோவ்ஸ்கி.

ஆனால் தன்னுடைய 26 ஆம் வயதிலேயே அவர் சர்வதேசக் கிரிக்கெய் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதற்கு அவரின் உடல்நிலைதான் காரணம் என சொல்லப்படுகிறது. தலையில் பலமுறை அடிபட்டுள்ளதால் அவரின் மருத்துவர்கள் எச்சரித்ததன் காரணமாக புக்கோவ்ஸ்கி இந்த சோகமான முடிவை எடுத்துள்ளார்.