ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (16:10 IST)

ரஜினி தெரிவித்த சீனியர் ஜூனியர் விவகாரத்தை - அதிமுக ஏன் மீண்டும் மீண்டும் இதை கிளப்பி விடுகிறீர்கள் - தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேர்தலில் வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பரப்புரையை  தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் துவங்கிய தேனி மக்களவை உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வன்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்......
 
தமிழ்நாடு விளையாட்டு துறையில் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது அதை பெருமை படுத்தும் விதமாக இன்று கார் பந்தயம், உலக அளவில் வீரர்களை வரவழைத்து மிக பெரிய கார் பந்தயம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
 
இன்று மக்கள் பார்வைக்கு இலவசமாகவும், நாளை கட்டணமாகவும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன., நிச்சயமாக இந்த கார் பந்தயம் சிறப்பு மிக்க பந்தயம் என்றே சொல்ல வேண்டும்.
 
நீதிமன்றம் கூட பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த சொல்லியுள்ளது., உதயநிதி ஸ்டாலினும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தான் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.
 
இதில் யாருக்கும் காள்ப்புணர்ச்சி தேவையில்லை.
தமிழ்நாட்டின் பெருமையை உலக அளவிற்கு தெரிய படுத்தும் நிகழ்ச்சி இந்த கார் பந்தய நிகழ்ச்சி அதை நடத்தும் உதயநிதி ஸ்டாலினை பாராட்ட வேண்டுமே தவிர காள்புணர்ச்சி பட கூடாது.
 
மேலும் ரஜினிகாந்த் பேசிய சீனியர் ஜூனியர் குறித்த விவகாரம் தொடர்பாக முதல்வரும், ரஜினிகாந்த்-யும், துரைமுருகனும் பதில் சொல்லிவிட்டார்கள் அதிமுக ஏன் மீண்டும் மீண்டும் இதை கிளப்பி விடுகிறீர்கள் என புரியவில்லை, எங்களுக்குள் சமரசம் ஆகிவிட்டது.
 
பொதுவான கருத்தை சொன்னார், சீனியர்கள் நிறைய இருக்கிற கட்சி திமுக, மிக பெரிய பாரம்பரியம் இருக்கு என்ற பொதுவான கருத்தை தான் சொன்னார். சீனியர்களை விலகு என சொல்லவில்லை. சீனியர்கள் அதிகமாக உள்ள கட்சி அதை கொண்டு செலுத்த பெரிய திறமை வேண்டும் அதற்கு முதல்வருக்கு நன்றி சொன்னார் இது சந்தோசமான செய்தி தானே என பேசினார்.