செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (08:57 IST)

தடுப்பூசி போட்டிருந்தா மட்டும் ரயிலில் அனுமதி! – ஸ்ட்ரிக்டு காட்டும் மும்பை!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு உச்சத்தை தொட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தபட்டது. இதனால் கொரோனா பாதிப்புகள் சற்றே குறைந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மும்பை மின்சார ரெயில்களில் பயணம் செய்ய தடுப்பூசி போட்டிருத்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் தடுப்பூசி சான்றிதழ் பெற ப்ரத்யேக இணையதளத்தை மகாராஷ்டிரா அரசு உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.