செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 நவம்பர் 2018 (13:18 IST)

மிட் நைட்டில் விஷால் செய்த வேலை: இளம்பெண் பரபரப்பு புகார்

பெண் ஒருவர் விஷால் மீது மீடூ புகார் கூறியிருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா துறையில் பெண்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகளை ஹேஷ்டேக் மீ டூ என்ற இயக்கத்தில் பெண் பிரபலங்கள் தைரியமாக பதிவிட்டு வருகிறார்கள். 
 
அந்த வகையில் சமீபத்தில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து பல முக்கிய பிரபலங்கள் மீடூ புகாரில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் சங்கத் தலைவர் விஷால் நடிகைகளின் மீடூ புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என கூறினார். ஆனால் தற்பொழுது அவர் மீதே பெண் ஒருவர் மீடூ புகார் கூறியுள்ளார்.
 
விஸ்வதர்ஷினி என்ற பெண் பேஸ்புக் லைவில் கோபாலபுரத்தில் ஒரு அபார்ட்மெண்ட்டில் 4-வது மாடிக்கு நடுராத்திரி 2 மணிக்கு விஷால் வந்துவிட்டு, பிறகு பின்வாசல் வழியாக அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து ஓடினார். பின்வாசல் வழியாக விஷால் ஓடியது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். விஷால் செய்த அனைத்து லீலைகளுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது என கூறியுள்ளார்.
 
கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் விஷால் என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.