புதுச்சேரியில் வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு !
புதுச்சேரியில் கொரோன கால ஊரடங்கு மேலும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரொனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அங்கு கடந்த 7 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று மேலும் சில தளர்களுடன் கூடிய ஊரடங்கை வர்ம் 30 ஆம் தேதி வரை அரசு அமல்படுத்தியுள்ளது.
இதில், ஏற்கனவே மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இதுமேலும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை சாலை, பூங்காக்களில் காலை 5 மணி முதல் காலை 9வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம் எனவும், திருமணம் நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்; இறுதிச் சடங்கில் சுமார் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளில் 100 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் 5 நாட்களுக்குள் அங்குள்ள தொழிற்சாலைகள், மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களும், ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.