1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (14:11 IST)

மருத்துவமனையில் மேயர் தகராறு: புல்டோசர் வரவழைத்ததால் பரபரப்பு

utterpradesh
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு வருகை தந்த பாஜக மேயர் சுஸ்மா கார்வெல், அங்குள்ள ஐசியு அறைக்குள் ஷூ அணிந்துகொண்டு நுழையும்போது, பணியாளர்கள் அவரை தடுத்ததாகவும், இதில், மேயர் மற்றும் பணியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர், மருத்துவமனை வளாகத்திற்கு ஒரு புல்டோசர் வரவழைக்கப்பட்டதாகவும், இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகிறது.

இதுபற்றி, மருத்துவமனை நிர்வகம் மேயர் வருகையில் பிரச்சனை எதுவுமில்லை என்று கூறியுள்ளது.