செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 31 மே 2023 (21:34 IST)

பிரபல நடிகர் ஹரீஸ் பெங்கன் காலமானார்

haresh pengan
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் ஹரீஸ் பெங்கன் உடல் நலக்குறைவால் காலமானார்.

மலையாள சினிமாவின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்  ஹரீஸ் பெங்கன்.  இவர் மகேஷின்டெ பிரதிகாரம் ஜானே மன், ஜெய ஜெய ஜெயஹே, ஜோ அண்ட் ஜோ, மின்னல் முரளி உள்பட ஏராளமான  படங்களில் நடித்திருந்தார்.

சில மாதங்களான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு எண்ணாகுலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடிகர் ஹரீஸ் பெங்கன்( 49 வயது) சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, இவரது தங்கை இவருக்கு கல்லீரல் தானமாக கொடுக்க முன்வந்தார். இந்த இலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்த  ஹரீஸ் பெங்கன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன், சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.