திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (17:59 IST)

2 இதயங்களுடன் பிறந்த அதிசய குழந்தை

child
பீகார் மாநிலம் சரண் பகுதியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் 2 இதயங்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பீகார்  மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள சரண பகுதியில் உள்ளள தனியார் மருத்துவமனையில்  இன்று, நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் ஒரு தலையுடன் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்தக் குழந்தை பிறந்து 20 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்ததாகவும், சிசேரியன் மூலம் அந்தப் பெண் குழந்தையின் தாயார் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் அனில்குமார் கூறியுள்ளார்.