1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2023 (18:01 IST)

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அதை அரசியலாக்க கூடாது என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 
 
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர இருப்பதாக பாஜக கூறிவரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போது பொது சிவில் சட்டத்தை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் பாஜக அதை அரசியல் செய்யும் நோக்கத்துடன் இருப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் இதனை அரசியல் ஆக்கி வலுக்கட்டாயமாக நாட்டில் அமல்படுத்துவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார். 
 
பொது சிவில் சட்டம் நிச்சயமாக நம் நாட்டை பலவீனம் அடைய செய்யாது என்றும் பொது சிவில் சட்டத்தால் நாட்டில் மத நல்லிணக்கம் வலுவடையும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த சட்டத்தை இயற்றும் போது பொது வாக்கெடுப்பு மூலம் கருத்து கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva