வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூலை 2023 (17:45 IST)

உடைந்தது சரத்பவார் கட்சி.. 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே சிவசேனா கட்சி உடைக்கப்பட்ட நிலையில் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைக்கப்பட்டுள்ளதால் 2024 ஆம் ஆண்டு நடைபெறும்  பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணி அமைப்பதில் சரத்பவார் முக்கிய இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் தனது கட்சியை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளது. 
 
சரத்பவார் கட்சியில் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்எல்ஏக்கள் அஜித் பவார் உடன் சென்று விட்டதால் தற்போது அவர் அதிர்ச்சியில் உள்ளார். இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அமைய இருக்கும் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva