கொரோனாவில் இருந்து மீண்டு பயோபபுளில் இணைந்த ஆர் சி பி வீரர்!
ஆர்சிபி அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் ஆர் சி பி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல். இவர் தனது அறிமுக சீசனிலேயே 15 போட்டிகளில் 473 ரன்கள் சேர்த்து எமர்ஜிங் பிளேயர் விருதை பெற்றார். அதனால் இந்த ஆண்டு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ஆனால் அவர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அணியுடன் இன்னும் பயோபபுளில் இணையவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் அவர் அணியினருடன் பயோபபுளில் இணைந்துள்ளார்.