வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஜூலை 2024 (14:52 IST)

மணிப்பூரில் ராகுல் காந்தி வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன் துப்பாக்கி சூடு.. பெரும் பரபரப்பு..!

மணிப்பூரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை தந்த நிலையில் அவரது வரவுக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் வீடு மற்றும் சொந்த பந்தங்களை இழந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று மணிப்பூரில்  ராகுல் காந்தி சென்று கலவரம் நடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் நிவாரண முகாம்களில் உள்ள மக்களையும் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அவர் வருகை தந்த மாவட்டத்தின் ஒரு பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கு உள்ள இரு சமூகங்களை சேர்ந்தவர்களின் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் காவல் நிலையத்தில் தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஆயுதங்களுடன் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்ற சில மணி நேரத்திற்கு முன்பு அங்கு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva