1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2024 (08:14 IST)

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

சமீபத்தில் ஹத்ராஸ் என்ற இடத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 120க்கும் அதிகமான பொதுமக்கள் பலியான நிலையில் சம்பவம் இடத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சற்றுமுன் உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதிக்கு ராகுல் காந்தி வருகை தந்ததாகவும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பலியானவர் குடும்பத்திற்கு நிவாரணம் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டாம் தேதி ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்னும் ஆளும் கட்சி எம்பிக்களே ஹத்ராஸ்  செல்லாத நிலையில் முதல் நபராக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹத்ராஸ் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முக்கிய குற்றவாளி ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பிடிக்க உதவும் நபர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva