புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 21 நவம்பர் 2020 (17:13 IST)

கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் கட்டாயம் – மத்திய சமூக நீதித்துறை

செப்டிங் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யவதற்கு இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்தவேண்டுமென மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் இயற்றியுள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றுவதில் இனிமேல் மனிதர்களை ஈடுபடுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கவும் சட்டத்தில் இடமுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் இதற்காகக் குரல் கொடுத்துவரும் நிலையில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை முடிவுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.