செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (09:31 IST)

சொத்து தகராறு – கேக்கில் விஷம் கலந்து அண்ணன் குடும்பத்தைக் கொலை செய்த கொடூரன் !

தெலங்கானாவில் அண்ணன் தம்பிக்கு இடையிலான சொத்து தகராறில் தனது கேக்கில் விஷம் வைத்து அண்ணன் குடும்பத்தைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார் தம்பி.

தெலங்கானாவில் வசித்து வரும் தொழிலதிபர் ரவிக்கும் அவரது தம்பி ஸ்ரீனிவாசுக்கும் இடையில் சொத்துத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ரவியின் 9 வயது மகன் ராம்சரணின் பிறந்தநாள் விழாவுக்கு ஸ்ரீனிவாஸ் பிறந்தநாள் கேக்கை பரிசாக அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த கேக்கை சாப்பிட்ட ரவியின் குடும்பத்தினர் 4 பேரும் மயங்கியுள்ளனர்.

அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க ராம்சரண் முன்பே இறந்துவிட்டதாகவும், ரவி சிகிச்சையின் போது இறந்துள்ளார். மேலும் ரவியின் மனைவி பாக்யா மற்றும் 5 வயது மகள் பூஜிதாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் கேக்கை ஸ்ரீனிவாஸிடம் போலிஸ் நடத்திய விசாரணையில் சொத்துப் பிரச்சனைக் காரணமாக தான் தான் கேக்கில் விஷத்தைக் கலந்து அனுப்பியதாக அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.