தாய்க்கு வாலிபரோடு தொடர்பு – மகன் செய்த விபரீத செயல் !

Last Modified வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (09:08 IST)
தர்மபுரி மாவட்டத்தில் தனது தாய்க்கு இளைஞரோடு தொடர்பு இருந்ததைக் கண்டுபிடித்த  மகன் அந்த வாலிபரைக் கொலை செய்துவிட்டு தாயையையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் கௌதம் எனும் இளைஞர். இவர் தன் தாயோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாய்க்கு ராஜா என்ற இளைஞரோடு தொடர்பு இருந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயம் கௌதம்முக்கு தெரிய வந்துள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த கௌதம் நேற்று முன் தினம் நள்ளிரவில் ராஜாவை நடுரோட்டில் வைத்துக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த தனது தாயையையும் கத்தியால் குத்தியுள்ளார். அதன் பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ள கழுத்தில் கத்தியால் அறுத்துக் கொண்டுள்ளார்.

கௌதம்மின் தாயார் எழுப்பிய அலறலால் அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டில் குற்றியிராய் கிடந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலிஸார் மருத்துவமனைக்கு வந்து கௌதமிடம் நடத்திய விசாரணையில் தனது தாய்க்கும் ராஜாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதனால் கோபமாகி இருவரையும் கொல்ல முயற்சித்தாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :