வகுப்பறையில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்ட மாணவி – மதுரையில் பரபரப்பு !

Last Updated: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (16:39 IST)
மதுரையில் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூர், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் சுந்தரி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 16 வயது மகள் இருந்தார். இவர் அந்தப் பகுதியில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கத்தை விட சீக்கிரமாகவே பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற வீட்டில் இருந்து கொண்டு வந்த புடவையை வகுப்பறையில் மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை வகுப்பறைக்கு வந்த சில மாணவிகள் பார்த்து அதிர்ச்சியாகி, பள்ளி நிர்வாகத்துக்கு சொல்ல அவர்கள் அர்ச்சனாவின் பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர். அங்கு திரண்ட அர்ச்சனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி நிர்வாகிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட அங்கே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து பள்ளிக்குப் போலிஸ் காவல் போடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்ற  போலிஸார் மாணவியின் பெற்றோர், தோழிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :