1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (09:01 IST)

கணவன் குடும்பத்தார் சித்ரவதை – குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட மனைவி !

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுத்த தொல்லையால் தனது இரண்டு மகன்களையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஒரு பெண்.

ராஜு மற்றும் சீதா ஆகிய தம்பதிகள் மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் 5 வயதில் ருத்ரா என்ற மகனும் 4 வயதில் ஸல் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்குமிடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த சண்டைகளுக்குக் காரணம் ராஜுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில்  அனைவரும் ஒன்றாக சேர்ந்து சீதாவை சித்ரவதை செய்துள்ளனர். இதனால் மன விரக்தி அடைந்த சீதா கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்குக் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு சென்றுள்ளார்.

தாய் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து அறையில் தன் இரண்டு மகன்களையும் தூக்கு மாட்டிக் கொலை செய்துவிட்டு அதன் பின் தானும் தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் தங்கள் சாவுக்கு தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கடிதம் எழுதியுள்ளார்.  இதை வைத்து சீதாவின் அண்ணன் போலிஸில் புகார் அளிக்க போலிஸார் ராஜு மற்றும் அவரது குடும்பத்தாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.