புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (15:09 IST)

ஒரு புடவையால் நின்ற கல்யாணம் – நம்பமுடியவில்லையா ?

கோப்புப் படம்

கர்நாடகாவில் திருமணத்துக்காக மணப்பெண் எடுத்த புடவை பிடிக்காததால் மணமகனின் வீட்டார் திருமணத்தையே நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகள் ரகுகுமார் மற்றும் சங்கீதா. இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோரிடம் தங்கள் காதலை சொல்லி சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து  திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடக்க மணப்பெண்ணின் திருமணப் புடவை தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் அதை மாற்றவேண்டும் எனவும் ரகுராமின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சங்கீதா மற்றும் அவரது பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை. இது சம்மந்தமாக இரு குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் திருமணத்தையே நிறுத்தியுள்ளனர். இதையடுத்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலிஸில் மோசடி புகார் கொடுத்துள்ளார் சங்கீதா.