புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (14:14 IST)

நண்பன் வெளிநாடு செல்வதைத் தடுக்க விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ! – போலிஸில் சிக்கிய மர்மநபர் !

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஹைதராபாத் விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 3ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. அந்த இமெயிலில் சாய்ராம் என்பவரின் பெயரும் அவரது மொபைல் நம்பரும் இருந்தது. இதனால் விமானநிலையத்துக்குப் போலிஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது.

சம்மந்தப்பட்ட இமெயிலின் ஐபி முகவரியை வைத்து போலிஸார் அதனை ட்ரேஸ் செய்தபோது சஷிகாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கனடா செல்லும் தனது நண்பர் சஷிகாந்தின் மேல் கொண்ட பொறாமையால் இந்த செயலை செய்ததாகக் கூறியுள்ளார். அவரைப் போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்து சந்தித்த சாய்ராம் செலவுக்கு 500 ரூபாய் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.