திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (09:12 IST)

என்.டி.டி,வி உரிமையாளர் வெளிநாட்டுப் பயணம் ரத்து – பின்னணியில் சுப்ரமண்ய சுவாமியா ?

என்.டி.வி உரிமையாளர் வெளிநாடு செல்லும் பயணத்தை முடக்கிய நடவடிக்கையின் பின்னணியில் பாஜக எம்.பி சுப்ரமண்ய சுவாமி இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

என்.டி.டி.வி டிவி சேனல் உரிமையாளர் பிரனாய்ராய் தனது மனைவி ராதிகா ராய் அவர்களுடன் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் விமான நிலையத்திற்கு வந்திருப்பதை அறிந்த சிபிஐ அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் அவர்களை தடுத்து நிறுத்துமாறு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவியை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை என்.டி.டி.வி ஊடகம் கடுமையாகக் கண்டனம் செய்தது. அதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு பாஜக-வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமிதான் கரணமென அவரது டிவிட் மூலம் சொல்லியுள்ளார். அதில்
‘என்டிடிவி பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோரைத் தேடுவதற்கான அறிவிப்பைக் கோரி நான் தான் ‘ட்வீட்’ செய்தேன். சிபிஐ செயல்பட்டது. பிரனாய் ராய் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்றார். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, போர்டிங் மறுக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுசம்மந்தமாக ராயின் மகள் தாரா ராய் ‘நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் இந்தியாவில் - யாரும் பாதுகாப்பாக இல்லை. இது ஒரு சர்வாதிகார ஆட்சி’ எனத் தெரிவித்துள்ளார்.