புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:07 IST)

இந்திய விமானங்களில் ஆப்பிள் லேப் டாப்புக்கு தடை : பரபரப்பு தகவல்

இந்திய உள்நாட்டு இயக்குநரகம், விமானங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் 15 இன்ச் மேக்புக் புரோ மாடல் லேப்டாப்களை கொண்டு செல்ல வேண்டாம் என  வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 20 15 ஆம் வருடம்  செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை விற்பனை செய்த, 15 இன்ச் மேக்புரோ லேப்டாப்புகளில் பேட்டரிகள் அதிகமான வெப்பமடைந்து தீ பற்ற வாய்ப்புள்ளது என்பதால் அந்த காலக்கட்டத்தில் வாங்கிய லேப்டாப்களை ஆப்பிள் சர்வீஸ் செண்டர்களுக்கு கொண்டு வந்து கொடுத்து சரிசெய்துகொள்ளலாம் என அறிவித்தது.
 
எனவே இந்த அறிவிப்பை கருத்தில் கொண்டு, விமான இயக்குநரகம், பேட்டரி சூடாகிவிடும் காரணத்தால் 15 மேக்புக் புரோ லேப்டாப்களை அதன் நிறுவனம் பாதுக்காப்பானது என உறுதியளிக்கும்வரை அதை யாரும் விமான நிலையத்தில் கொண்டு செல்ல வேண்டாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் 20 15 ஆம் வருடம்  செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை விற்பனை செய்த, 15 இன்ச் மேக்புரோ லேப்டாப்புகளில் பேட்டரிகள் அதிகமான வெப்பமடைந்து தீ பற்ற வாய்ப்புள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த லேப்டாப்பில் உள்ள சீரியல் எண்ணை வைத்து அது பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். 
 
அதனால் மேற்சொன்ன தேதியில் வாங்கப்பட்ட லேப்டாப்களை தவிர மற்ற லேப்டாப்புகளை கொண்டு செல்ல தடையில்லை. எனவும் அறிவித்துள்ளது.