திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (14:01 IST)

விமான நிலைய வளாகத்திற்குள் பெய்த மழை: அதிர்ச்சியடைந்த பயணிகள்

லண்டனில் உள்ள விமான நிலையம் ஒன்றின் மேற்கூரையிலிருந்து மழை கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

லண்டனில் உள்ள லூடான் விமான நிலைய வளாகத்திற்குள் திடீரென மேற்கூரையிலிருந்து மழை கொட்டியது. மேற்கூரையில் எற்கனவே விரிசல் விழுந்திருந்த நிலையில், மழை வந்ததால், வளாகத்திற்குள் தண்ணீர் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டதட்ட 15 நிமிடங்களுக்கும் மேலாக தண்ணீர் விழுந்து கொண்டிருந்ததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அந்த விமான நிலையத்தில் இருந்த ஒருவர், வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.