புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (11:10 IST)

லண்டன் விமான நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமியை எதிர்த்து கோஷம்: பெரும் பரபரப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இங்கிலாந்து, அமெரிக்கா  மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பிச் சென்றார். நேற்று காலை அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். லண்டனில் தமிழர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிலர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 
 
தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்தது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஆகியவற்றை கண்டித்து லண்டனில் உள்ள பெரியார்-அம்பேத்கார் அமைப்பை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி எதிராக கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து முதல்வர் பழனிசாமியை மாற்று வழியில் விமான நிலைய அதிகாரிகள் அழைத்துச் சென்றனர் 
 
இதுகுறித்து கோஷமிட்ட பெரியார்-அம்பேத்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியபோது 'தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் விமான நிலையம் வந்தோம். நீட் தேர்வை அனுமதித்ததும் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிகாமல் மெளனம் காப்பதும் தவறு என்றும் இதனை அவருக்கு உணர்த்தவே இந்த கோஷத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்