1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:29 IST)

திருமண விழாவில் நடனமாடிய மம்தா பானர்ஜி!

திருமண விழாவில் நடனமாடிய மம்தா பானர்ஜி!
மேற்குவங்க மாநிலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் எளிமையானவர் என்பதும் தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளும்படி யார் அழைப்பு விடுத்தாலும் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பார் என்பதும் தெரிந்தது 
 
அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமண விழா ஒன்றில் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். இந்த திருமண விழாவின் போது மேற்கு வங்க மாநில பாரம்பரிய நடனம் நடக்குழுவினர்களால் ஆடப்பட்டது. அப்போது குழுவினருடன் சேர்ந்து மம்தா பானர்ஜியும் சில நிமிடங்கள் நடனமாடினார் இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது