வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (21:02 IST)

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்
தமிழ் சினிமாவின் அம்மா நடிகை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது சரண்யா பொன்வண்ணன் தான். இவர் இயக்குனர் பொன்வண்ணனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார் என்பதும் சமீபத்தில் இவர்களது 25வது திருமண விழா கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணனுக்கு 2 மகள்கள் உள்ளனர் அவர்களில் மூத்த மகளான பிரியதர்ஷினிக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் சரண்யா பொன்வண்ணன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திருமணத்தில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது