தொடர்புடைய செய்திகள்
- வந்தாச்சு சின்னம்மா அடுத்து யார் ஆவா சிஎம் மா? டி.ஆர். பேட்டி!
- பாரத் பெட்ரோலியம், எல்ஐசி, ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனை! – பட்ஜெட்டில் அறிவிப்பு!
- கருப்பு உடையில் வந்த எம்.பிக்கள்; பட்ஜெட் வாசிக்கும்போது அமளி!
- சசிகலாவுக்கு அதிமுக எம்.பி ஆதரவா? வைரலாகும் எம்பியின் டுவீட்
- 87 வருடங்களில் முதல்முறையாக ரஞ்சி கோப்பை ரத்து?
மம்தா கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா: பாஜகவில் சேர்கிறாரா?
மம்தா கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கட்சியிலிருந்து ஏற்கனவே ஐந்து அமைச்சர்கள் உள்பட ஒருசில எம்எல்ஏக்கள் பதவி விலகி பாஜகவில் இணைந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் போலவே மேற்கு வங்க மாநிலத்திலும் இன்னும் ஒரு சில மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த முறை மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. அந்த வகையில் மம்தா கட்சியிலிருந்து ஏற்கனவே ஐந்து அமைச்சர்கள் உள்பட ஒருசில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர் என்பதும் அவர்களில் சிலர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டைமண்ட் துறைமுகம் தொகுதி எம்எல்ஏ தீபக் ஹல்தார் என்பவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இதுவரை பதவி விலகி பாஜகவில் சேர்ந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்திருப்பது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
