வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:06 IST)

அக்காக் கணவரைப் பற்றி கேட்டு நடிகையை சீண்டிய நபர்… நெத்தியடி பதிலால் சைலண்ட்!

நடிகை காஜல் அகர்வாலின் கணவர் எப்படிப்பட்டவர் என்று கேட்ட நபருக்கு அவரின் தங்கை நிஷா அகர்வால் பதிலளித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த காஜல் அகர்வால் சில மாதங்களுக்கு முன்னர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் அவரது மும்பை வீட்டில் மிகவும் எளிமையாக குறைந்த விருந்தினர்களுடன் நடைபெற்றது. இதையடுத்து காஜல அகர்வால் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்று வந்தார். அதன் பின்னர் இப்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலிடம் ரசிகர் ஒருவர் ‘உங்கள் அக்காவின் கணவர் பணக்காரா? எப்படிப்பட்டவர்?’ என்று கேலி செய்யும் விதமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த நிஷா ‘ஆமாம் அவர் குணத்தில் பணக்காரர்தான்’ எனக் கூறியிருந்தார். இந்த பதிலில் காஜல் அகர்வால் மற்றும் அவரின் கணவர் கௌதம் ஆகியவர்களையும் டேக் செய்திருந்தார்.