வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:11 IST)

மம்தா பானர்ஜியின் முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவரது கட்சி மெஜாரிட்டி பெற்றதையடுத்து முதல்வராக பதவி ஏற்றார்
 
எம்எல்ஏ இல்லாத ஒருவர் முதல்வராக பதவியேற்ற 6 மாதங்களுக்குள் மீண்டும் எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ஆனால் அந்த காலக்கெடு நவம்பர் மாதம் நவம்பர் 5ஆம் தேதிக்குள் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நவம்பர் 5ஆம் தேதிக்குள் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடைத்தேர்தலை விரைவில் நடத்த கோரி தேர்தல் ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
ஆனால் மத்திய அரசின் மீது மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியை மீண்டும் எம்எல்ஏ விடாமல் பாஜக அரசு சதி செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
நவம்பர் 5ஆம் தேதிக்குள் அவர் சட்டமன்ற தேர்தலை சந்தித்து எம்எல்ஏ ஆகவில்லை என்றால் அவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது