செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (12:18 IST)

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் இவர்தான்!

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் இவர்தான்!
தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ள நிலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது 
 
இதன்படி இந்த தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளராக எம்எம் அப்துல்லா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக எம்எம் அப்துல்லா அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அதிமுக விரைவில் வேட்பாளரை அறிவிக்கப்படுமா? அல்லது தேர்தல் இன்றி எம்எம் அப்துல்லா தேர்வு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு போதுமான உறுப்பினர் இருப்பதால் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது