புதன், 17 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (17:34 IST)

3 எம்.எல்.ஏக்கள், ஒரு அமைச்சர் ராஜினாமா: உபியில் பாஜகவுக்கு அதிர்ச்சி!

3 எம்.எல்.ஏக்கள், ஒரு அமைச்சர் ராஜினாமா: உபியில் பாஜகவுக்கு அதிர்ச்சி!
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள், மற்றும் ஒரு அமைச்சர் திடீரென ராஜினாமா செய்திருப்பது அக்காட்சியின் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு கட்சி தாவும் எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பாஜக எம்எல்ஏக்கள் மற்றுமொரு ஒரு அமைச்சர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்றும் அவர்கள் நால்வரும் சமாஜ்வாதி ஜனதா கட்சி கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் திடீரென 3 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்தது அக்கட்சிக்கு பின்னடைவு என்று கூறப்படுகிறது