ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 ஜனவரி 2022 (12:38 IST)

என் தம்பி செய்வது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை… மம்தா பானர்ஜி காட்டம்!

மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டும் தனது தம்பி தனிமைப் படுத்திக் கொள்ளாமல் இருப்பது குறித்து மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாவது குறித்து பேசியுள்ளார். அந்த மாநிலத்தில் சமீபத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15,000 ஐ கடந்தது. இதனால் வரும் நாட்களில் கட்டுப்பாடு மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனது சகோதரரின் செயல் குறித்து மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில் ‘என் வீட்டில் நடப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. என் தம்பியின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் என் தம்பி பாபுன் அவர் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றி வருகிறார். அவரின் செயல் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவரிடம் நேரடியாக எங்கும் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டேன்’ என்று பேசியுள்ளார்.