செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (15:44 IST)

”நெருப்புடன் விளையாட வேண்டாம்..” பாஜகவை எச்சரிக்கும் முதல்வர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்தி வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ”நெருப்புடன் விளையாட வேண்டாம்” என பாஜகவை எச்சரித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து பல பேரணிகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்றைய பேரணியில் பேசிய அவர், “குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை அமைதியான முறையில் போராட்டம் நடக்கும். மாணவர்கள் ஜனநாயக வழியில் போராட்டத்தை தொடர வேண்டும்” என கூறினார்.

மேலும் அவர், ”குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களை பாஜக மிரட்டுகிறது, நெருப்போடு விளையாட வேண்டாம் என நான் பாஜகவை எச்சரிக்கிறேன்” என கூறினார்.