1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (15:15 IST)

படுக்கைக்கு மறுத்தேன் ; வாய்ப்புகளை இழந்தேன் : மல்லிகா ஷெராவத் ஓப்பன் டாக்

நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்த போது நான் மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன் என பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் பேட்டியளித்துள்ளார்.

 
சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கும் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால், பட வாய்ப்புகள் பாதிக்கும் என்பதால் நடிகைகள் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியே கூறாமல் இருந்தனர்.
 
ஆனால், கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட பின் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து தைரியமாக பகிருந்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் மல்லிகா ஷெராவத்தும் சேர்ந்துள்ளார். பாலிவுட்டில் மர்டர் படம் மூலம் ரசிகர்களிடையே இவர் பிரபலமானார்.

 
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் “என்னுடன் நடத்த நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்துள்ளனர். அதற்கு நான் மறுத்ததால் பட படங்களில் இருந்து என்னை வெளியேற்றினர். அவர்களுக்கு பிடித்த மாதிரி நான் நடந்திருந்தால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை.
 
மர்டர் படம் வெளியான போது ஒரு முதியவர் எனக்கு பல தொல்லைகளை கொடுத்தார். எனக்கு ஆதரவாக பேச யாருமே இல்லை. எனவே, அப்போது தனிமையை உணர்ந்தேன். புகார் கூறினால் என்னை பற்றியே தவறாக கூறி விடுவார்கள் என பயந்தேன்” என அவர் வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.