திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (21:11 IST)

நிலவில் இடம் வாங்கிய தோனி படத்தின் நாயகன்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நிலவின் பின்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தான் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 
நிலவில் உள்ள இடங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வேதேச லூனார் நில பதிவகம் என்ற அமைப்பிடம் இருந்து குறிப்பிட்ட இடங்களை அதற்கான தொகையை செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். ஆனால் சட்டரீதியாக உரிமை கொண்டாட முடியாது.
 
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த சிங், மாரே மஸ்கோவியென்ஸ் என்று அழைக்கப்படும் நிலவின் பின்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் நிலவில் இடம் வாங்கிய முதல் பாலிவுட் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 
மேலும், சுஷாந்த் மேடே 14 என்ற நவீன தொலைநோக்கியை சொந்தமாக வைத்துள்ளார்.